உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நேற்று வைகாசி முதல் அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்  உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறுப்பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பிதுர் தோஷத்திற்காக வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். சிதம்பரத்தில் இருந்து சிவத்தொண்டர் பரமசிவம் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வந்தனர். பிதுர் மற்றும் மோட்ச தீபம் ஏற் றினர். அதன் பின் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர். சிறப்பு அபிஷேகத்தை கோவில் அர்ச்சகர் சக்தி சந்திரசேகர சிவாச்சாரியர் நடத்தி வைத்தார். இதே போன்று திருவாரர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட சிவத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !