உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை பூஜை!

வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை பூஜை!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம்  வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. வள்ளி தெய் வானை சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை லோகு ஐயர்  செய்தார். கார்த்திகேயன் அன்னதானம் வழங்கினார். புண்ணியர் பேரவை நிறுவனர் அம்சா பாஸ்கரன், செல்வம், கவுன்சிலர் ராஜாராம், தனசேகரன்,  ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !