தீமிதி விழா: திரவுபதியம்மன் வீதியுலா!
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் வரும் 22ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு திரவுபதிய ம்மன் கோவிலில் வரும் 22ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 15ம் ÷ ததி முதல் தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 17 ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு அர்சுனன் மற்றும் திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும்; சுவாமி வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து 22ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அரவாண் வீதியுலாவும்; மாலை 5:00 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது. 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.