உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகு நாச்சியம்மன் கோவில் விழா கோலாகல கொண்டாட்டம்

அழகு நாச்சியம்மன் கோவில் விழா கோலாகல கொண்டாட்டம்

திருச்செங்கோடு : அழகு நாச்சியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அழகு நாச்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதிலும், இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அர்த்தநாரீஸ்வரர் தேர்திருவிழா நடப்பதற்கு முன், அஷ்டத்திக்கு பாலகர்கள் என்ற காவல் தெய்வங்களுக்கு, பரிகார பூஜைகள் செய்து, அழகு நாச்சியம்மன் பரிபூண அலங்காரத்தில், நள்ளிரவில் தேரோட்டம் நடக்கும். அதனால் பக்தர்கள் அம்மன் தேர், திருட்டுத்தேர், இருட்டுத் தேர் என அழைத்து வந்தனர்.இந்த ஆண்டு தேர்த்திருவிழா தற்போது நடந்து வருகிறது. நேற்று மாலை, 5 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்துச் செல்லப்பட்டது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.பக்தர்கள் சிலர் கூறும்போது, "இருட்டு தேர் ஐதீகப்படி, இரவில் தான் நடத்த வேண்டும். அரசு மற்ற பகுதிகளில் தேர்திருவிழா நடத்த போடப்பட்ட சட்டத்தை திருத்தி, ஐதீகமாக நடக்கும் விழா என்பதை கருத்தில் கொண்டு, காலம் காலமாக இரவில் நடந்த தோரோட்டத்தை, இரவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !