கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :3794 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர முன்னேற்ற திட்டம் சார்பில் , கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. எல்லா ஆண்டும் வைகாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த டபூஜை நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி விவேகானந்தபுரம் கேந்திர வளாகத்தில் பஜனை, பெண்கள் மாநாடு, ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.