உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாகத் திருவிழா: மே26ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநியில் வைகாசி விசாகத் திருவிழா: மே26ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் "வைகாசி விசாகத் திருவிழா" மே 26ல் கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. வசந்த உற்சவவிழா என அழைக்கப்படும் வைகாசி விசாகத்திருவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மே 26ல் காலை 10.30 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாநாட்களில் முத்துகுமாரசுவாமி தங்கமயில், வெள்ளிகாமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவுலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள் மே 31ல் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், ஏழாம் நாள் ஜூன் 1ல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பெரியநாயகியம்மன் கோயில் மாலை 4.35 மணிக்குமேல் வைகாசிவிசாக தேரோட்டம் நான்கு ரதவீதிகளில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !