உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரத்தின் தாக்கம்: அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம்: அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைய வேண்டி, சத்தியம்மனுக்கு, நேற்று, மஞ்சள் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தில் உள்ள சத்தியம்மன் கோவிலில், நேற்று, மஞ்சள் அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பிற்பகல் 12:00 மணிக்கு, கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடந்தன. அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைய வேண்டி, மாலை 6:00 மணியளவில், அம்மனுக்கு, 108 குடம் மஞ்சள் அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !