சிங்கப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 23ல் துவக்கம்
சென்னை: சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவம், வரும், 23ம் தேதி துவங்குகிறது. சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில், வரும், 23ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குகிறது. அதை முன்னிட்டு, வரும், 22ம் தேதி அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் உற்சவம் நடைபெறுகிறது. வரும், 23ஆம் தேதி காலை கொடியேற்றம், புண்ணிகோடி விமானம், மாலை சிம்ம வாகனம், 24ம் தேதி காலை சூரியபிரபை, மாலை அன்ன வாகனம், 25ம் தேதி காலை கருடசேவை, மாலை அனுமந்த வாகனம், 26ம் தேதி காலை சேஷ வாகனம், ஏகாந்த சேவை, பகல் விசேஷ திருமஞ்சனம், மாலை சந்திரபிரபை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்க உள்ளது. வரும், 27ஆம் தேதி காலை நாச்சியார் திருக்கோலம், மாலை, யாளி வாகனம், 28ம் தேதி காலை சூர்ணாபிஷேகம், மாலை யானை வாகனம், 29ம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. வரும், 31ம் தேதி தீர்த்தவாரி பல்லக்கு, தீர்த்தவாரி திருமஞ்சனம் ஆகியவை நடக்க உள்ளன.