நாககாளியம்மன் கோவில் விழா!
ADDED :3795 days ago
குறிச்சி : சுந்தராபுரம் அருகேயுள்ள நாககாளியம்மன் கோவில் விழா முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சுந்தராபுரத்தை அடுத்த செங்கோட்டையா காலனியிலுள்ள நாககாளியம்மன் கோவிலின், 14ம் ஆண்டு விழா, 17 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், வீரபத்ரருக்கு பொங்கல் மற்றும் மகா அபிஷேக பூஜை நடந்தன. நேற்று காலை, பலி பீட வழிபாடு, அம்மன் கொடி கட்டுதல், மாலை அம்மன் அழைத்தல், இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரக ஊர்வலம் துவங்குகிறது. மதியம் அம்மனுக்கு மகா அபிஷேக பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. நாளை காலை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.