கிறிஸ்துவ ஆலயங்களில் புது நன்மை பெருவிழா
ADDED :3795 days ago
பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் பாளையம் கிறிஸ்தவ ஆலயங்களில் புது நன்மை பெருவிழா நடந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் என பெயர்சூட்டும் நிகழ்ச்சிக்கு பின், சிறுவர்கள், ஏசுவை உடலில் ஏற்றுக்கொள்ளும் புதுநன்மை பெரு விழா, பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்தது. பெரம்பலூர் புனித பனி மயமாதா ஆலயத்தில் வட்டார முதன்மை குரு அடைக்கலசாமி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில், 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புது நன்மை எடுத்தனர். பாளையம் புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குகுரு சேவியர் தலைமையில் அன்னமங்கலம் பங்குகுரு சூசை மாணிக்கம், ஜெயராஜ், சேசுசபை சிலுவை ஈஸ்டர் ஆகியோர் நடத்திய கூட்டுத் திருப்பலியில், 36 சிறுவர்கள் புது நன்மை எடுத்தனர்.