சாந்த முனீஸ்வரன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
ADDED :3896 days ago
செஞ்சி: சோ.குப்பம் சாந்த முனீஸ்வரன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் கிராமத்தில் உள்ள சாந்த முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 3ம் தேதி நடந்தது. அன்று முதல் தினமும் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தனர். நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தினர். மாலை சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது.