திருப்பாச்சூர் வாசீஸ்வரர் பிரம்மோற்சவம் துவக்கம்
திருவள்ளூர்; திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, பாசூர் அம்மன் வழிபாட்டுடன் இன்று துவங்குகிறது. திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான இக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இன்று காலை, பாசூர் அம்மன் வழிபாட்டுடன் விழா துவங்குகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது. வரும், 28ம் தேதி அன்ன வாகனம் மற்றும் திருக்கல்யாணமும், 29ம் தேதி ஊஞ்சல் சேவையும், ஜூன், 2ம் தேதி பூப்பல்லக்கு போன்ற உற்சவம் நடக்கிறது. உற்சவ விவரம்:
தேதி நேரம் உற்சவம்
மே 21 காலை 7:00 பாசூர் அம்மன் வழிபாடு மாலை 6:00 பொங்கல் விழா
மே 22 காலை 10:00 சொர்ணகாளி உற்சவம் மாலை 6:00 விநாயகர் ஊர்வலம்
மே 23 காலை 6:00 கொடியேற்றம் மாலை 6:30 ரிஷப வாகனம்
மே 24 காலை 10:00 சூரிய பிரபை மாலை 6:00 சந்திர பிரபை
மே 25 காலை 9:30 அதிகார நந்தி மாலை 6:00 பூத வாகனம்
மே 26 காலை 9:30 கேடயம் மாலை 6:00 நாக வாகனம்
மே 27 காலை 9:30 கேடயம் மாலை 6:00 பஞ்சமூர்த்தி உற்சவம்
மே 28 காலை 9:00 திருக்கல்யாணம் மாலை 6:00 யானை வாகனம்
மே 29 காலை 9:30 வைபவம் மாலை 6:00 ஊஞ்சல் உற்சவம்
மே 30 காலை 9:30 கிளிக்கூண்டு உற்சவம் மாலை 6:00 குதிரை வாகனம்
மே 31 காலை 9:30 சிம்ம வாகனம் மாலை 6:00 நடராஜர் அபிஷேகம்
ஜூன் 1 காலை 9:30 அணுக்கிரக தரிசனம் மாலை 6:00 ரிஷப வாகனம்
ஜூன் 2 மாலை 6:30 பூப்பல்லக்கு
ஜூன் 3 மாலை 6:00 ரிஷப வாகனம்
ஜூன் 4 காலை 6:30 கொடியிறக்கம் மாலை 6:00 சாந்தி அபிஷேகம்.