உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா துவக்கம்

திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா துவக்கம்

திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கொடியேற்றதுடன் துவங்கியது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி காலை 11:00 மணிக்கு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. 31ம் தேதி மதியம் 1:00 மணிக்கு திரவுபதியம்மன், அர்ச்சுணன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. வரும் ஜூன் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !