ஆண்டாள் கோயில் கோபுர பணிக்கு உதவி
ADDED :3787 days ago
பரமக்குடி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை (மே 22) நடக்கிறது. இக்கோயிலில் வடபத்ர சயனர் கோபுரத்தை, அகில உலக யாதவர்களின் சார்பில், தொழிலதிபர் தர்மலிங்கம் புதுப்பித்துள்ளார். கும்பாபிஷேக விழாவில், தமிழ்நாடு யாதவா மகாசபை முக்கிய பிரமுகர்கள், முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி சேர்மன் பாண்டியன், வேலுமாணிக்கம் குரூப்ஸ் வேலு மனோகரன், அரனையூர் பால்பாண்டி, பரமக்குடி அண்ணா இளம்பரிதி, மேமங்களம் துரைபாண்டி மற்றும் விருதுநகர் நிர்வாகிகள் வக்கீல் பாண்டிய ராஜன், மாரியப்பன், சங்கை, சங்கரபாண்டியன் பங்கேற்கின்றனர்.