மகாலட்சுமிபுரம் சீனிவாசா கோவில் 39ம் ஆண்டு ரத உற்சவம் துவக்கம்
பெங்களூரு: மகாலட்சுமிபுரம் சீனிவாசா கோவிலில், 39ம் ஆண்டு, பிரம்ம ரத உற்சவம், வரும் 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான, 25ம் தேதி, காலை 10:00 முதல் பகல் 12:00 மணி வரை, சுவஸ்திவச்சனா, துவாரஹனா; மாலை 6:30 மணிக்கு, யாகசால பிரவேசம், அக்னி பிரதிஸ்தே, ஹோமம், பலிஹரனா, சேஷ வாகன உற்சவம். வரும் 26, 27ம் தேதி, காலை 9:30 மணிக்கு, நித்யஹோமமும்; மாலை 6:30 மணிக்கு, கருடு உற்சவம் மற்றும் கல்யாண உற்சவம். நான்காம் நாளான, 28ம் தேதி, பகல் 12:00 மணிக்கு, பிரம்ம ரத உற்சவம், வஜ்ரகலச அலங்காரம், அன்னதானம் வழங்கல்; மாலை 6:30 மணிக்கு, ஊஞ்சல் சேவை. 29ம் தேதி, காலை 9:30 மணிக்கு, மகா அபிஷேகம்; மாலை 6:30 மணிக்கு வைரமுடி உற்சவம், துவஜவரோஹனா, பூர்ணாஹூதி. வரும் 30ம் தேதி, காலை 10:30 மணிக்கு, துவாதசி திருவாராதனை; இரவு 7:00 மணிக்கு, சயன உற்சவமும்; ஏழாம் நாளான 31ம் தேதி, காலை 6:00 மணிக்கு, சுப்ரபாத சேவை நடக்கிறது.