அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்!
ADDED :4162 days ago
பங்கயம் துளபமா தவிபுன்னை சண்பக
பலாசமொ ழிநவ மல்லிகை
பகர்நந்தி மந்தாரை கைதைமலர் என்னுமிவை
பதுகால சந்தி மலராம்
தங்குகர வீரம்ப லாசமுற் பலமோடு
தண்துள பம்வெண் தாமரை
சாற்றுகோ வீதமலர் ஏகபத் திரமொடு
தழைந்த குரவங் கூவிளம்
பொங்குமுற் பலமலரும் உச்சியம் பொழுதினில்
பூசனைக் குரிய வென்றாய்
புகல்குமுத முல்லைமல் லிகைசாதி கூவிளம்
பூந்த மனமரு வெண்துழாய்
செங்கமல மணவேர் இராப்பொழுதின் அரையிரவு
திகழுட்ட புட்ப மென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.