நாள், மாதம் ஆகியவற்றுக்குரிய மலர்கள்!
ADDED :3896 days ago
அலரிமுதல் எழுவாச் மலர்புகலின் வனசநல்
ஆம்பல்நீள் குவளை மணமிக்
கலரிகுவ லயமுடன் தவளசத தளநீலம்
ஆகுமென மறைபு கன்றாய்
குலவுகூ விளைதுளபம் உயர்விளா மாதுளை
குறித்தபச் சறுகு நாவல்
கூறுமால் காந்தியிவை வாரபத் திரமதி
மறிமுதற் கயலின் ஈறாய்த்
தலமகிழ் பலாசுபுனை வெள்ளெருக்(கு) அலரிமலர்
சண்பகம் கொன்றை தும்பை
சாற்றுகத் தரிபட்டி கஞ்சமலர் காவியொடு
தழையுமல் லிகையு கந்தாய்
சிலையிதென நடுமலை குனித்துநகை செய்தரிய
திரிபுரம் எரித்த பரனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.