நடராசமூர்த்திக்குரிய புஷ்பங்களும் அட்டபுஷ்பங்களும்!
ADDED :4162 days ago
மத்தமகிழ் மந்தாரை சாதிபுனை நந்தியா
வர்த்தமா தவிது ரோணம்
மல்லிகை குராவலரி கொக்கிற்கு அருக்கமலர்
வசைமுத லான தளவச்
சுத்தமண மலர்கொன்றை கல்லாரம் ஆம்பல்
சொற்பலா சம்க டம்பு
சூழ்மணம் தருபட்டி பாதிரியும் எந்தைநீ
சூட்டியணி தற்கு ரியவாம்
கொத்தலர் அருக்கமலர் சண்பகம் பாடலங்
கோகனதம் அலரி புன்னை
குளிர்நந்தி யாவர்த்த மலர்த்தும்பை யெட்டுமரம்
கூறரிய அட்ட புட்பம்
சித்தர்முனி வர்அமரர் பத்தர்இவ் வகைபூசை
செய்யமுறை யெனவு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.