உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதந்தோறும் பவுர்ணமி நாளில் செய்யும் பூசையும் பயனும்!

மாதந்தோறும் பவுர்ணமி நாளில் செய்யும் பூசையும் பயனும்!

மறிமுதல் பங்குனி வரைக்கும்அம் மதிதொறும்
வருப ருவநட் சத்திரம்
மன்னுதின மதின்உரிய பூசைதம னம்கந்தம்
மருவுமுக் கனியி னியபால்
உறுமதுர சர்க்கரை அபூபம் ஓதனபூசை
உயர்தீப பூசை நெய்தேன்
உறுகிருத கம்பளந் தயிர்இவைக் குறுபலன்
ஓங்கு சீர்சா லோக்கியம்
பெறுமிட்ட சித்தியரி நாசம்பி ரீதியாம்
பெருகுதனம் மதிப லமுடன்
பெரியபழி கெடுமாயுள் ஆரோக்கி யம்மகப்
பேறுசேய் உதவும் என்றாய்
சிறுபொழுதும் உன்னையக லாதுநற் பூசைபுரி
தில்லைமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !