உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாத அபிடேகமும் அதன் பலனும்!

மாத அபிடேகமும் அதன் பலனும்!

மறியிடப மதியதனில் ஈரொன்ப தாடகம்
வாசநல் லுதக மாட்டின்
வருடநால் ஒன்பதினி லிங்கபூ சனையாற்றும்
மாபயன் பெறுவ ரானிக்கு
உறுவில்வ நற்குழம் பாட்டில்ஐம் பதுவருடம்
உரர்பூசை செய்த பேறாம்
ஒருதினம் பதினாறு தெங்கின்இள நீர்தன்னை
ஓங்கு கடகத் தாட்டினோர்
பெறுபயன் சதவருட மாபூசை புரியுநற்
பேறதாம் ஆவ ணிதனில்
பெருகுமா வின்பாலொர் தினமாட்டில் அறுகுறுணி
பெரியவா யிரவ ருடமே
செறிதர இலிங்கபூ சனைசெய்த பேறடைவர்
தில்லைமூ வாயிர வர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

கன்னிதனில் நல்லெண்ணெய் நான்குசேர் அதையிலிங்
கத்தின் அபிடே கம்செயக்
கருதரிய வாண்டயுத பூசைபுரி பயனுறுங்
கதிருறுங் கோன்ம திதனில்
பன்னுமொன் பானுழக்கு ஆவின்நெய் யாட்டியுற்
பலநெய்தல் கூவி ளத்துள்
பயிலுமொன்று எண்ணான்கு அருச்சனை புரிந்திடப்
பகருமோர் இலக்கம் ஆண்டில்
துன்றுபூ சாபலம் கௌவியங் கார்த்திகை
துலங்கிடஅ னந்த வருடம்
தூயபூ சைப்பயன் தனுவில்மகி டத்தயிர்ச்
சுவையோத னத்தொ டிஞ்சிச்
சின்னமுறு பச்சடி நிவேதிக்கில் ஈராறு
சிவபூ சையாண் டின்பயன்
சிவசிதம் பாவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

நவின்மகர குடமதியின் அறுசுவைக் கருணையுடன்
நற்சு வைப்பல காரநெய்
நாடுபர மான்னமுக் கனிபால் மரீசிநீர்
நவிலு மணவெந் நீருடன்
சுவைபெருகும் ஓதன நிவேதித்து வழிபடும்
தூய ரைம்பது வற்சரம்
சுபரிலிங் கார்ச்சனைசெய் புண்ணியம் பெறுவார்இம
தோய சந்தன மைம்பலம்
கவனமொடு சிவலிங்க முடியினபி டேகம்செய்
கனபுண்ணி யத்தை வினவில்
கருதுபதி னாறாண்டு சிவபூசை புரிபயன்
கைவல்ய மீன்ம திதனில்
திவசமொன் றதில்நல்கும் என்னவீ ராகமஞ்
செப்பினாய் அடியார் உய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !