ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை முதல் யாகசாலை பூஜை விஜயபாஸ்கர் பட்டர் தலைமையில் நடந்தது.நேற்று முன்தினம் கலெக்டர் ராஜாராமன்,எஸ்.பி .மகேஸ்வரன்,திருப்பணிக்குழு தலைவரும்,ராம்கோ சேர்மனுமான ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா ஆகியோர் கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்தினர்.கோயில் வளாகம் மற்றும் சுற்றுபுற மாடவீதிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஐந்து இடங்களில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.நாங்குநேரி,திருப்பதி ஆகிய இடங்களை சேர்ந்த ஜீயர் சுவாமிகள் பங்கேற்கின்றனர்.ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.