தொந்தரவு செய்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்?
ADDED :3871 days ago
யாராவது உங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு என்ன பட்டப்பெயர் வைக்கலாம் என்று யோசிக்கவே வேண்டாம். ஏனெனில் ‘ராவணன்’ என்ற பெயர் அவர்களுக்கு பொருத்தமானது. ராவணனின் உண்மைப் பெயர் ‘தசமுகன்’. ‘தசம்’ என்றால் ‘பத்து’. பத்து முகங்களை உடையவன் என்பதால் இந்தப்பெயர் வந்தது. இவன் சிவபக்தனாக இருந்தான். ஒரு கட்டத்தில் மமதை அதிகமாகி, சிவன் தங்கியிருந்த கயிலாயமலையையே தன் கையால் பெயர்த்தெடுத்தான். கயிலாயம் குலுங்கியது. தன்னைத் தொந்தரவு செய்த தசமுகனை ‘ராவணா’ என்று அழைத்தார் சிவன். ‘ராவணன்’ என்றால் ‘தொந்தரவு செய்பவன்’ என்று பொருள். தன் பெயருக்கேற்றபடி, அவன் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமனுக்கும், மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கும் பெரும் தொந்தரவு செய்து, ராமனின் கையால் மரணத்தை தழுவினான்.