உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு ஹோமம்!

அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு ஹோமம்!

செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ் வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு  அருணாசலேஸ்வரர் கோவில் பல நுõறு ஆண்டுகளுக்கு பிறகு 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம்  செய்தனர். இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று  காலை அருணாச்சலேஸ்வரர், அபிதாகுஜலாம்பாள்,  வெங்கடேச பெருமாள், தாயார் பிரம்மா, கணபதி, தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர், 18 சித்தர்கள், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ச ந்திரன், சூரியன்  உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். காலை 11 மணிக்கு 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை யும்,  யாகசாலை பூஜைகளும் நடந்தன. பிற்பகல் 2 மணிக்கு கலசா அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், சாமி வீதி உலாவும்  நடந்தது. இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !