உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் வெள்ளிவிழா

பாலமுருகன் கோவிலில் வெள்ளிவிழா

குன்னுார் : குன்னுார் அருகே தேனலையில் உள்ள பாலமுருகன் கோவிலில், 25ம் ஆண்டு வெள்ளிவிழா நடந்தது. கடந்த, 19ம் தேதி மாலை, 4:00 மணிக்கு கணபதி பூஜை, ரக்ஷா பந்தனம், பரிவட்டை கட்டுதலும், 20ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்ப ஸ்தானம், வேள்வி பூஜை, வேதபாராயணம், பூர்ணாகுதி, 11:00 மணிக்கு கும்ப புறப்பாடு, 11:30 கோபுர கலசத்துக்கும், மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், வஸ்தி அலங்காரம், 1:00 மணிக்கு அருளுரையும், மாலை 3:00 மணிக்கு இன்னிசையும், இரவு, 8:00 மணிக்கு அய்யன் திருவீதி உலாவும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு பட்டாபிஷேகமும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !