இறைபணி மன்றம் சார்பில் கோவிலில் உழவார பணி
ADDED :3847 days ago
வளசரவாக்கம்: இறைபணி மன்றம் சார்பில், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் வேள்வீஸ்வரர் கோவிலில், நேற்று உழவாரப்பணிகள் நடந்தன. விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வேம்புலியம்மன் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், உழவாரப்பணி விழிப்புணர்வு குறித்து திருக்கயிலாய வாத்தியம் முழங்க புறப்பட்டனர். திருமுறை ஈசனுடன் அடியார்கள் திருமுறை தலையில் சுமந்து திருவீதியுலா வந்த அவர்கள், அகத்தீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். பின், கோவிலின் சுற்றுப்பிரகார சுவர்கள், உள்பிரகாரம், திருக்குளம், செடி, கொடிகளை அகற்றினர். சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், பூஜை பொருட்களை துலக்குதல், போன்ற பணிகளில் அடியார்கள் ஈடுபட்டனர். மன்ற நிறுவனர் கணேசன் கூறுகையில், வரும் 28ம் தேதி மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் உழவாரப் பணிகள் நடைபெற உள்ளது, என்றார்.