கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாகம் துவங்கியது!
ADDED :4114 days ago
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவிலில் வைகாசி விசாக பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. விருத்தாசலம், மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் வைகாசி விசாக பூஜை கடந்த 23ம் தேதி துவங்கி, வரும் ஜூன் 1ம் தேதி முடிகிறது. அதையொட்டி, நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கொளஞ்சியப்பர் உற்சவர் வெள்ளித் தேரில் உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 1ம் தேதி விசாகத்தை முன்னிட்டு அன்று காலை சிறப்பு அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.