உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்

செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்

திருக்கனுார்: கோரைக்கேணி, செல்வ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 7ம் தேதி நடக்கிறது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கோரைக்கேணியில் அமைந்துள்ள, விநாயகர், முருகர், கெங்கையம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு, கோபூஜை, கணபதி பூஜை, புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை, சுமங்கலி பூஜை நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு, முதல் கால வேள்வி ஆரம்பிக்கிறது. 108 நாட்டு மருந்து மூலிகையால் யாகம், 7 ம் தேதி காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம், காலை 10:00 மணிக்கு செல்வமுத்து மாரியம்மன் கோபுரம் மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !