மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவிலில் அதிகார நந்தி உற்சவம்!
ADDED :3898 days ago
மயிலாப்பூர்: வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள காமாட்சியம்மன் உடனுறை வெள்ளீசுவரர் கோவிலில், அதிகார நந்தி உற்சவம் நேற்று நடந்தது. அதிகார நந்தியில் வெள்ளீசுவரர், கந்தருவி வாகனத்தில் காமாட்சி அம்மன், கந்தருவன் வாகனத்தில் முருகப்பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.