ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி விழாகொடியேற்றம்!
ADDED :3785 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலின் 17 நாள் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கொடியை பூஜாரி கணேசன் சுமந்து வர, எம்.வி.எம். குழும நிர்வாகிகள் மணிமுத்தையா, மருதுபாண்டியன் மற்றும் பக்தர்கள் உடன் வந்தனர். ஏற்பாடுகளை உபயதாரர் ராமையா குமாரர்கள், தக்கார் ஜெயராமன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தரம், பூபதி, முருகன் செய்திருந்தனர்.