ராமலிங்க பிரதிஷ்டை விழா ராமேஸ்வரத்தில் கோலாகலம்!
ADDED :3898 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.இதைமுன்னிட்டுராமநாசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீராமர், லட்சுமணர், ஹனுமன் ஆகியோர் தங்க கேடயத்தில் நேற்று மாலை புறப்பாடாகி திட்டகுடியில் எழுந்தருளினர். அங்கு ராமருக்கு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர், ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. பல்லக்கில் துாக்கி வரப்பட்ட ராவணனை, ஸ்ரீராமபிரான் அம்பு எய்தி சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உமா சங்கர் நிகழ்த்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.