அய்யா வைகுண்டர் பதியில் அன்னதானம்
ADDED :3785 days ago
நாகர்கோவில் : நாகர்கோவில் பத்தல்விளை அய்யா வைகுண்டர் தர்மபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் அலங்கார வாகனத்தில் அய்யா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் அலெக்ஸ், இளைஞரணி தலைவர் ராம்குமார், வர்த்தகர் அணி தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.