பொன்அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே வள்ளியிரச்சலில் பொன்அழகு நாச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, வரும், 29ம் தேதி காலை, 6 மணிக்கு நடக்கிறது. கடந்த, 22ம் தேதி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. நேற்று மாலை, 4.30 மணிக்கு கிராம சாந்தியும், இன்று மாலை முதற்காலயாக பூஜை துவங்குகிறது. 28ம் தேதி காலை இரண்டாம் காலயாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும், 29ம் தேதி நான்காம் கால யாக பூஜையும், காலை, 6 மணிக்கு கடம் புறப்பாடும், 6.30 மணிக்கு விநாயகர், பொன்அழகு நாச்சியம்மன் கோபுரம், ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 6.50 மணிக்கு பொன்அழகு நாச்சியம்மன் மூலவர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 3 இடங்களில் அன்னதானம் நடக்கிறது. பின், வள்ளியிரச்சலில் கோவிலுக்கு தென்புறம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், காலை, 8.30 மணிக்கு நடக்கிறது. இங்கும், அன்னதானம் வழங்கப்படுகிறது.