முருகன்தாங்கலில் சாகை வார்த்தல் விழா
ADDED :3946 days ago
அவலூர்பேட்டை : முருகன் தாங்கல் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், சிறுதலைப்பூண்டி ஊராட்சி முருகன் தாங்கல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.