அய்யலூரில் மகாமுத்துமாரியம்மன் உற்சவ விழா
ADDED :3784 days ago
வடமதுரை: அய்யலூரில் சக்திவிநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடி கருப்பணசுவாமி, சீதாராமர், காசிவிஸ்வநாதர், பைரவர், சப்தகன்னிமார் ஆகிய கிராம கோயில்கள் உள்ளது. ஊர் மக்கள் சார்பில் மூன்று நாட்கள் உற்சவ திருவிழா நடந்தது. முத்துநாயக்கன்பட்டியில் இருந்து அம்மன் கரகம் பாலத்து களர்பட்டி கோ யில் கொண்டு வரப்பட்டது. அக்கினிச்சட்டி எடுத்தல், பாரிவேட்டை ஆடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தன. நேற்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.