உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்துளசியம்மன் கோவில் ஆண்டு விழா

பட்டத்துளசியம்மன் கோவில் ஆண்டு விழா

கோத்தகிரி : கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டத்துளசியம்மன் கோவில், 25ம் ஆண்டு திருவிழா நடந்து வருகிறது.கடந்த, 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, பூ வரம் வேண்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.26ம் தேதி, இரவு 8:00 மணிக்கு மதுரை வீரன் பூஜையும், இரவு, 10:00 மணிமுதல் 12:00 மணிவரை முனீஸ்வரர் பூஜையும் இடம் பெற்றது. நேற்றுகாலை, 9:00 மணி முதல், 12:00 மணிவரை ஓம்சக்தி வழிப்பாட்டு குழுவினர் சார்பில், ஆற்றங்கரையில் இருந்து, பால்குடம் எடுத்து அம்மன் அழைப்பு நடந்தது. பகல், 1:00 மணிக்கு உச்சிபூஜையும், மாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வரும், 3ம் தேதி காலை, 9:00 மணிமுதல், 10:30 மணிக்குள் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !