திண்டிவனம் கோவிலில் பகாசூரன் வதம் நிகழ்ச்சி
ADDED :3786 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு, பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி முதல் சென்னை ஈஞ்சம்பாக்கம் லதா கதிர்வேல் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. பக்கிரிபாளையம் சக்திவேல் நாடக குழுவினரால் 24ம் தேதி முதல் தினமும் மகாபாரத தெருகூத்து நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் பகாசூரன் வதம் நிகழ்ச்சி, நகரின் முக்கிய வீதிகளில் நடந்தது. பின்னர், கோவில் மைதானத்தில் பீமன், பகாசூரனை வதம்செய்யும் நிகழச்சி நடந்தது.