முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :3787 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கொட்டகுடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, அனுக்ஞை விக்னேஸ்வர், பூஜை,கணபதி பூஜை நடைபெற்றது. அதன்பின், கோயில் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் கொட்டகுடி, கள்ளிக்குடி, புல்லுகுடி, திருவெற்றியூர் உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.