பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக தின விழா
ADDED :3787 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக தின விழா நடந்தது. சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு, புதிதாக பெருமாள் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவு நாள் (கும்பாபிஷேக தின விழா) நடந்தது. இதில் பெருமாளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின் யாகசாலை பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி முணியப்ப செட்டியார் செய்திருந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.