கடலியில் சாகை வார்த்தல்!
ADDED :3967 days ago
அவலூர்பேட்டை: கடலி கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், கடலி குளக்கரையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , தீபாரதனை நடந்தது.மாலையில் சாகை வார்த்தல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.