செஞ்சி கோவிலில் சிறப்பு அலங்காரம்!
ADDED :3789 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு ரூபாய் நோட்டுக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்து வருகின்றனர்.
கடந்த 27ம் தேதி பகல் 1 மணிக்கு விருந்தும். இரவு 27வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு இரண்டு லட்சம் ரூபாய் கரன்சி நோட்டுக்களை கொண்டு சிறப்பு அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது.