உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்!

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்!

ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவில், 10 நாட்கள் திருவிழாவில், நேற்று, தேர் திருவிழா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது திரவுபதி அம்மன் கோவில். அந்த கோவிலில், கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பின், ஒவ்வொரு நாளும், பகாசுரனுக்கு சோறு கொண்டு செல்லுதல், திருக்கல்யாணம், நச்சுக்குழி யாகம், அரக்கு மாளிகை கோட்டை, அர்ச்சுனன் தபசு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, தேர் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் அங்குள்ள வீதிகள் வழியாக சுமந்து சென்றனர். பகுதிவாசிகள், தங்களது வீட்டின் முன் கோலமிட்டு தேரை வரவேற்றனர். இன்று மாடுபிடி சண்டை நிகழ்ச்சி நடைபெறும். வரும், 31ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறும். இதில் கிராமத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !