உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 18வது ஆண்டாக நடைபெறும் சம்பந்தர் குருபூஜை இசைவிழா!

18வது ஆண்டாக நடைபெறும் சம்பந்தர் குருபூஜை இசைவிழா!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 18வது ஆண்டாக திருஞான சம்பந்தர் குருபூஜை இசைவிழா நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்ற, இசை ஆர்வலர்கள் பலர் உள்ளனர். அவர்களின் முயற்சியால், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் பொள்ளாச்சியில் அவ்வப்போது நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, 18 ஆண்டுகளாக திருஞான சம்பந்தர் நினைவாக இசைவிழாவும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா, 31ம் தேதி, ஆர்.பொன்னாபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொன்முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெறும் இசைவிழாவில், பொள்ளாச்சி கிராம பகுதிகளை சேர்ந்த இசைக்கலைஞர்கள் பலரும் பங்கேற்று பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் உள்ளனர். இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் ரீதியான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சி அமைப்பாளரான ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்த தர்மராஜ் கூறுகையில், 31ம் தேதி காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் இசை நிகழ்ச்சி, அன்று முழுக்க நடைபெறும். திருஞான சம்பந்தர் நினைவாக, இசைக்கும், இறைவனுக்கும் செய்யும் தொண்டாக இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !