உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோன சித்தர் ஆசிரமத்தில் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்!

மோன சித்தர் ஆசிரமத்தில் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம்!

செஞ்சி: மோன சித்தர் ஆசிரமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, சொக்கநாத பெருமான் கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 7ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா செத்தவரை கிராமத்தில் உள்ள சிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில், மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாத பெருமான் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவிலில் சொக்கநாதர், மீனாட்சியம்மன், தட்சணா மூர்த்தி, துர்கை, ஜெயவிநாயகர், பால முருகன், கால பைரவர், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், நாயன்மார்கள் மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், 32 அடி உயர சிவ தப சிலை மற்றும் கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.

மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் 5ம் தேதியன்று காலை 6:00 மணிக்கு, கோ பூஜை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, கணபதி வேள்வியும், மாலை 3:00 மணிக்கு, காப்பு அணிவித்தல், 6:00 மணிக்கு, திருக்குடங்கள் எழுந்தருளல், 7:00 மணிக்கு, முதல் கால வேள்வியும் நடக்க உள்ளது. மறுநாள் 6ம் தேதி காலை 6:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும், 11:00 மணிக்கு, பரிவார தெய்வங்கள் கரிக்கோலமும், மாலை 6:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வியும், இரவு 8:30 மணிக்கு, பேரொளி வழிபாடும், தெய்வங்களுக்கு காப்பு அணிவித்தலும் நடக்க உள்ளது.

வரும் 7ம் தேதியன்று காலை 9:00 மணிக்கு, விநாயகர், முருகப்பெருமான், பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டும், 11:00 மணிக்கு, மீனாட்சி சமேத சொக்கநாத பெருமான் திருக்குட நன்னீராட்டு விழாவும், பகல் 12:00 மணிக்கு தச தரிசன வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சிவஜோதி மோன சித்தர் மேற்பார்வையில் திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள், அடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !