காஞ்சி பெரியவர் ஜெயந்தி விழா!
ADDED :3791 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில், காஞ்சி மஹா பெரியவரின் ஜெயந்தி விழா வரும் 2 ம் தேதி நடக்கவுள்ளது. காஞ்சி சங்கரமடம் ஸ்ரீ மஹா பெரியவர் என்றழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா, திண்டிவனத்தில் வரும் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. திண்டிவனம் வசந்தபுரம் சுந்தர அய்யர் இல்லத்தில் அன்று காலை 7:00 மணிக்கு கலச ஆவாஹனத்துடன் விழா துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு மஹா பெரியவரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடக்கிறது. வீதியுலாவை, மயிலம் பொம்மைபுர ஆதீனம் 20 ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.