உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜபெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்

வரதராஜபெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்

கடலூர் : கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் பிரமோற்சவம் திருமஞ்சனத்துடன் நேற்று (5ம் தேதி) துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 8ம் தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் ராஜகோபாலன் சேவை, 8ம் தேதி இரவு 8 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் சேவை நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 7 மணிக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணிக்கு தங்க கருடவாகன மகோற்சவம் நடக்கிறது. 11ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், பூர்ணாஹூதி, 12ம் தேதி இரவு 7 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !