சிதம்பரம் ஆத்மநாதர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை விழா
சிதம்பரம் : சிதம்பரம் ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் குரு பூஜை விழா நடந்தது. சிதம்பரம் வேங்கான் தெருவில் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் கோவில் உள்ளது. இங்கு மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல நடராஜர் கைப்பட எழுதியதாக புராணம் உண்டு. அந்த இடத்தில் ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான குருபூஜை விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு சிவபூஜையுடன் குருபூஜை துவங்கியது. காலை 7.30 மணிக்கு ஹோமம், 8 மணிக்கு திருவாசகம் முற்றோதலும், 11 மணிக்கு அபிஷேக ஆராதனையும் 12 மணிக்கு நடந்த மகா தீபாராதனையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சிவனடியார்கள் மனமுறுகி திருவாசகம் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாகேசுவர பூஜை நடந்தது. ஏற்பாடுகளை குருநமச்சிவாயர் சுவாமிகள் மட டிரஸ்டி பசவராஜ், கவுரவ ஆலோசகர் சங்கர நடராஜ தீட்சிதர் செய்திருந்தனர்.