உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நக்கரவந்தன்குடி கோவிலில் தீ மிதி உற்சவம்

நக்கரவந்தன்குடி கோவிலில் தீ மிதி உற்சவம்

கிள்ளை : சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடி திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடந்தது. சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் திரவுபதி அம்மன் கோவில் 108 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ஆண்டிற்கான தீ மிதி உற்சவ விழா கடந்த மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று பகல் 12 மணிக்கு சோதனை கரகம் எடுத்து வந்து அக்னி வளர்த்தலும், மாலை 5 மணிக்கு தீ மிதி கரகம் எடுத்து வந்து தீ மிதி உற்சவமும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் பூசாரியிடம் சாட்டையடி பெற்றனர். முன்னதாக அப்பகுதி இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !