அரவிந்தர் வீதி கெங்கை முத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம்
ADDED :5210 days ago
புதுச்சேரி : அரவிந்தர் வீதி கெங்கை முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி அரவிந்தர் வீதி கெங்கை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா, கடந்த மாதம் 23ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 24ம் தேதி 2ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலசாபிஷேகம் நடந்தது. 3ம் தேதி காலை 10 மணிக்கு ஜலம் திரட்டுதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம் மதியம் 1 மணிக்கு கூழ் வார்த்தலும், இரவு 7 மணிக்கு கரகம் புறப்பாடும், இரவு 9 மணிக்கு பள்ளயமும் நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.