காரைக்காலில் கந்தூரி விழா கொடிமரம் நடும் பணி துவக்கம்
ADDED :5211 days ago
காரைக்கால் : காரைக்கால் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழாவிற்கு கொடிமரம் நடும் பணி நடந்தது. காரைக்கால் பெரிய பள்ளி வாசல் என அழைக்கப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 188ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று பகல் 2.30 மணிக்கு ரதம், பல்லக்கு ஊர்வலம், மறுநாள் ஹலவு என்னும் போர்வை வீதி உலா, 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு வலியுல்லாஷ் ரவ்லா மீது சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா கொடியேற்றத்திற்காக தர்கா எதிரில் கொடிமரம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. பிரம்மாண்டமான கொடிமரமானது கிரேன் உதவியால் அமைக்கப்பட்டது.