தங்க காக வாகனத்தில் திருநள்ளார் சனீஸ்வரர் வீதியுலா!
ADDED :3786 days ago
காரைக்கால்: சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவத்தில், தங்க காக வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. காரைக்கால், திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. கடந்த 24ம் தேதி, செண்பக தியாகராஜர் உன்மத்த நடனத்துடன், வசந்த மண்டபத்திலிருந்து யதா ஸ்தானத்திற்கு எழுந்தருளினார். கடந்த, 29ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, சனீஸ்வர பகவான், தங்க காக வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். முன்னதாக, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.